சுடச்சுட

  

   அனுமதி பெறாத பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை

  By dn  |   Published on : 26th March 2014 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் பிரசாரத்தில் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுலருமான தரேஸ் அஹமது.

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

  வேட்பாளர்கள் மனு தாக்கலுக்கு முன்பு, தங்களது பெயரில் வங்கி கணக்கு தொடங்கி செலவிடும் தொகையை, இந்த வங்கி கணக்கின் மூலமாகவே பண பரிமாற்றம் செய்ய வேண்டும்.  மனுதாக்கலின் போது, வேட்பாளருடன் 4 பேர்  மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும், உரிய அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

  தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள், செலவினம், வேட்பு மனு தாக்கல் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய பொது விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  

  கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ப. மதுசூதன் ரெட்டி, தேர்தல் திட்டமிடலுக்கான ஒருங்கிணைப்பு அலவலர் த. மலையாளம், தேர்தல் செலவு கணக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகாயினி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai