சுடச்சுட

  

  அதிமுகவின் மனக்கோட்டையை தகர்க்க வேண்டும்: விஜயகாந்த் பேச்சு

  By dn  |   Published on : 26th March 2014 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  40 தொகுதிகளிலும் வெல்ல பேண்டும் என்ற  அதிமுகவின் மனக்கோட்டையை தகர்க்க வேண்டும் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

  பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியது:

  தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும். தேர்தலுக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராவார். லாலாபேட்டையில் மேம்பாலம் கட்டவில்லை, பெரம்பலூர் - ஆத்தூர் - சேலம் வழியாக ரயில் பாதை வசதி ஏற்படுத்தவில்லை. மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை, கல்லாறு குறுக்கே அணை கட்டுவேன் என்றார்கள். ஆனால், அணை கட்டவில்லை.  இந்தத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். தேமுதிகவுக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் என்றார்கள். எங்களுக்கு தைரியம் உள்ளது என்பதை நிரூபிக்க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட்டோம். கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை. இப்போது, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என மனக்கோட்டை கட்டுகின்றனர் அதிமுகவினர். தமிழக மக்கள் அதை மண் கோட்டையாக்க வேண்டும்.

  நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார் அவர்.

  கூட்டத்துக்கு தேமுதிக மாவட்ட செயலர் துரை. காமராஜ் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சி. சந்திரசேகரன், மதிமுக மாவட்ட செயலர் செ. துரைராஜ், பாமக மாவட்ட செயலர் செந்தில், ஐ.ஜே.கே. மாவட்ட தலைவர் குணசேகரன், ஐஜேகே மாநில தலைவர் கோவை தம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai