சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அனுமதியின்றி மதுபானம் விற்ற 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்குள்பட்ட லப்பைகுடிக்காடு பகுதியில் பறக்கும்படை வட்டாட்சியர் கஜேந்திரன் தலைமையிலான அலுவலர்கள் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (33), சுப்பிரமணியன் (35) ஆகியோர் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 43 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai