சுடச்சுட

  

  பெரம்பலூர் துறைமங்கலம், சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திமுக வேட்பாளர் ச. பிரபு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

  திமுக ஆட்சியில் தான் பெரம்பலூர் நகராட்சி வளர்ச்சி அடைந்தது. முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, ஆ. ராசா ஆகியோரது முயற்சியால் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், புறவழிச்சாலை திட்டம், புதை சாக்கடைத் திட்டம், சாலை தடுப்பு சுவர், தெரு விளக்குகள், கேந்திர வித்யாலய பள்ளி, அரசு தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கீழக்கணவாய் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குரும்பலூரில் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், நாரணமங்கலத்தில் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை, மேலும், திமுக அரசால் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் ரயில் பாதை அமைக்கவும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்  என்றார் அவர்.  பிரசாரத்தின்போது, பெரம்பலூர் மாவட்ட திமுக செயலர் பா. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு. அட்சயகோபால், முன்னாள் எம்எல்ஏ மா. ராஜ்குமார், நகரச் செயலர் என். ராஜேந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai