சுடச்சுட

  

  நாட்டில் நல்லாட்சி அமைய அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார் திரைப்பட நடிகை விந்தியா.

  பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, புறநகர் பேருந்து நிலையம், நான்கு மற்றும் மூன்று சாலை சந்திப்பு பகுதிகள் உள்பட 21 வார்டுகளில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜாவை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியது:

  2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற பெறச் செய்ததை போல, மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவுக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழகத்தை போல, இந்தியாவிலும் நல்லாட்சி மலர அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

  முன்னதாக, பெரம்பலூர் ஒன்றியப் பகுதிகளிலான செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கோனேரிப்பாளையம், சோமண்டாபுதூர், வடக்குமாதவி, சமத்துவபுரம், காந்திநகர், எளம்பலூர் உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதைராஜா.

  நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத் தலைவர் மா. ரவிச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் அ. அசோக்ராஜ், நகரச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai