சுடச்சுட

  

  கரூர் மாவட்டம், குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் வயலில் கவிழ்ந்த விபத்தில் மாணவ, மாணவிகள் 8 பேர் காயமடைந்தனர்.

  குளித்தலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி வேன் ஒன்று பெருமணி, நங்கவரம், மேல்நங்கவரம், பாதியகாவல்காடு, பொய்யாமணி, பெட்டவாய்த்தலை ஆகிய பகுதிகளில் மாணவ, மாணவிகளை  ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாதியகாவல்காடு அருகே வந்தபோது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப் பகுதியில் உள்ள வயலில் கவிழ்ந்தது.

  இதில் வேனில் பயணம் செய்த ஆ. கார்த்திகேயன் (11), ஆ. காவியா (9), க. நித்தீஸ் (11), க.நித்தியா (6), சாய்பிரசாத் (4), வெ. பூவர்த்தினி (4), தி. மனிஷா (8), ரமேஷ்குமார் (13) ஆகியோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்கை அளிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர். விபத்துக்குக்கு காரணம் வேன் ஓட்டுநர் குளித்தலை அடுத்த தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த பி. சுதர்சன் (25) வேனை அதிக வேகமாக ஓட்டியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

  விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் (35) அளித்த புகாரின் பேரில், போலீஸார் வேன் ஓட்டுநர் சுதர்சனை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai