சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் பொறியியல் கல்லூரி மாணவனை ஜயங்கொண்டம் அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அறிவுமணி மகன் பிரதாப் (23). இவர் நாமக்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதுகுறித்து மாணவியின் தாய் ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் பிரதாப்பை கைது செய்து ஜயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி முத்துமுருகன் பிரதாப்பை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai