சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மக்களவைத் தேர்தலில், 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில், நம்மை நாமே ஆளுகின்ற ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் அனைவரின் உரிமையும், கடமையுமாகும். சட்டத்திற்குள்பட்டு சாதி, மதம், இன, மொழி வேறுபாடுகளை களைந்து நேர்மையுடன் வாக்களிக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி முழக்கமிட்டவாறு  சென்றனர். 

  சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பெருமாள் கோவில் தெரு வழியாக சென்று மீண்டும் அதே பகுதியில் நிறைவடைந்தது.

  பேரணியில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம், வட்டாட்சியர் முத்தையா, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி முதல்வர் காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai