சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பில், எளம்பலூர் ரோவர் முதியோர் இல்லத்தில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, செயின்ட் ஜான் அறக்கட்டளை பொறுப்பாளர் டி. உமா தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர் எஸ். ஆனந்தராஜ், விரிவுரையாளர்கள் வி. தரணி, ஏ. நான்சி ஆகியோர் பேசினர்.

    சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அற்புதா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பி. சாமுவேல் தேவக்குமார் முதுமையான வாழ்க்கை குறித்து விளக்கினார்.

    இதில், ரோவர் முதியோர் இல்லத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி சமூகப் பணித் துறை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவி இ. ராஜேஸ்வரி வரவேற்றார். மாணவர் பி. மணிகண்ணன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai