சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே இருவேறு சம்பவங்களில் பள்ளி மாணவி, இளைஞர் தற்கொலை செய்துகொண்டனர்.

    குன்னம் அருகே கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் மகள் அருணா (13). 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25-ம் தேதி பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அருணா, மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை, புதன்கிழமை வீட்டுக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    போலீஸாருக்கு தெரியாமல் அவரது உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். கூத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், குன்னம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கருப்புசாமி வழக்குப் பதிந்துள்ளார்.

    இளைஞர் தற்கொலை: பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் ராஜா (16). 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாம். செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட வலியால் மனமுடைந்த ராஜா விஷம் குடித்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

    புகாரின் பேரில், மருவத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai