சுடச்சுட

  

  சத்துணவு சாப்பிட்ட 14 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

  By பெரம்பலூர்,  |   Published on : 28th March 2014 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை மதியம் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

  பெரம்பலூர் அருகே, தம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 39 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பயிலும் அனைவருக்கும் மதியம் பள்ளியிலேயே சத்துணவு வழங்குவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை மதியம் 38 மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனராம். அதைத்தொடர்ந்து, சுமார் 2.30 மணியளவில் சத்துணவு சாப்பிட்ட புவனேஸ்வரி (10), மோனிகா (10), சினேகா (10), சூர்யா (10), ரமேஷ்குமார் (7), செந்தமிழ் (9), முத்தழகி (10), கெüரி (7), சுரேஷ்குமார் (10), கார்த்திக் (10), சுமித்ரா (10), அறிவழகன் (8), அபிராமி (10), நிஷாந்தினி (7) உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

  அதைத்தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் 14 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

  இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது:

  மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட பின் ஆமணக்கு கொட்டை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவை, உணவு பாதுகாப்பு துறைக்கு ஆய்வுக்கு அனுப்பிள்ளோம் ஆய்வு முடிவு வந்தவுடன் யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai