சுடச்சுட

  

  செம்மொழித் தமிழாய்வு கருத்தரங்க நிறைவு விழா

  By பெரம்பலூர்,  |   Published on : 28th March 2014 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலை இலக்கியத் திறனாய்வுகளோடு எட்டுத்தொகை நூல்கள் ஒப்பீட்டு விளக்கங்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்க நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

  சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், ரோவர் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில், கடந்த 10 நாள்களாக நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் எஸ். பிரபாகரன் கலைப்படைப்பு நோக்கில் எட்டுத்தொகை எனும் தலைப்பிலும், முனைவர் ம. எ. தட்சிணாமூர்த்தி சமூகவியல் நோக்கில் குறுந்தொகை எனும் தலைப்பிலும், முனைவர் டி.என். ராமச்சந்திரன் மனித உளவியல் அடிப்படையில் நற்றிணை எனும் தலைப்பிலும், முனைவர் பி. மதிவாணன் மார்க்சியம் வரலாற்றியல் நோக்கில் புறநானூறு எனும் தலைப்பிலும், முனைவர் பாபுபெஞ்சமின் இளங்கோ மேற்கத்திய திறனாய்வுகளோடு நற்றிணை எனும் தலைப்பிலும், முனைவர் கணேசன் சூழலியல் அடிப்படையில் ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து எனும் தலைப்பிலும், முனைவர் மருததுரை குறியியல் நோக்கில் சங்க இலக்கியம் எனும் தலைப்பிலும், எஸ்.எ. சங்கரநாராயாணன் உள்ளுறைக் கூறுகள் அடிப்படையில் ஐங்குறுநூறு எனும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரை வழங்கி சிறப்புரையாற்றினர்.  தொடர்ந்து, பேராசிரியைகள் ரேணுகாதேவி, எஸ். புவனேஸ்வரி, முனைவர் முருகையன், முனைவர். சேசாஸ்திரி, முனைவர் முருகானந்தம், முனைவர் சுஜாதா விஜயராகவன், முனைவர் ஜாய்சலின் சர்மிளா, முனைவர் வி. சந்திரமதி ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர்.

  கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கல்லூரி தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார்.  

  கல்லூரி முதல்வர் வே. அயோத்தி முன்னிலை வகித்தார்.

  இதில், சிறப்பு விருந்தினர்களாக முனைவர் கே. செல்லப்பன், முனைவர் பிரேமா நந்தக்குமார், முனைவர் கரு. நாகராஜன், முனைவர் ப. மருதநாயகம், ஒருங்கிணைப்பாளர்கள் பொன். கதிரேசன், பேரா. புவனேஸ்வரி, தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai