சுடச்சுட

    

    வாக்களிப்பதன் அவசியம் குறித்த சுவரொட்டிகள் வெளியீடு

    By பெரம்பலூர்  |   Published on : 28th March 2014 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளை, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஷ் அஹமது வியாழக்கிழமை வெளியிட்டார்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியும், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விடியோ படக்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்குகளை விலைக்கு விற்கக்கூடாது, வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் கடைமையாகும், வாக்களிப்பதற்கு பணம் பெற்றால் ஓராண்டு சிறை தண்டனை என்பவற்றை விளக்கும் சுவரொட்டிகளை, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள், வங்கிகள் உள்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்படவுள்ள சுவரொட்டிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தரேஷ் அஹமது வெளியிட, அதை பெற்றுக்கொண்டார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான ப. மதுசூதன் ரெட்டி.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, திட்ட இயக்குநர் அய்யம்பொருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த. மலையாளம் உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai