சுடச்சுட

  

  "உரிய வழித்தடத்தில் மட்டுமே மினி பேருந்துகளை இயக்க வேண்டும்'

  By பெரம்பலூர்  |   Published on : 29th March 2014 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் மினி பேருந்துகள் அனைத்தும், உரிய வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி.

  பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மினி  பேருந்து, சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சங்கத் தலைவர்கள், உறுப்பினர்களுடான ஆலோசனைக்  கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, அழகர்சாமி பேசியது:

  பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் மினி பேருந்துகள் அனுமதிச் சீட்டில் உள்ள வழித்தடத்துக்குள்பட்டு மட்டுமே இயக்கப்பட வேண்டும். அனுமதிக்குப் புறம்பாக மாற்று வழித்தடத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு தேர்தல் கூட்டத்துக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும், சரக்கு வாகனங்களான மினி லாரி, வேன் ஆகியவற்றில் அனுமதிச் சீட்டுக்குப் புறம்பாக ஆள்களை ஏற்றிச் செல்லக்கூடாது. அனைத்து வாகன ஓட்டுநர்களும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

  விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவது தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 86 (1) ன் கீழ் அனுமதிச்சீட்டின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அழகிரிசாமி.

  கூட்டத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai