சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீச்சல் பயிற்சி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீச்சல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் முதல் 15 நாள்கள்,  இரண்டாவது 15 நாள்கள் என மூன்று மாதங்களுக்கு  ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்களுக்கு ஒவ்வொரு 15 நாள்களும் 20 நபர்கள் சேர்க்கப்பட்டு  சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

  நீச்சல் தெரிந்தவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும்,  நீச்சல் தெரியாத நபர்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சி பெறுவதற்கு 15 நாள்களுக்கு ரூ. 500 வசூலிக்கப்படும். பயிற்சியானது,  மாலை 3 மணி முதல் 4 மணி வரை பெண்களுக்கும்,  மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஆண்களுக்கும்  பயிற்சி அளிக்கப்படும்.

  எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்  என்றார் ஆட்சியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai