சுடச்சுட

    

    "தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

    By பெரம்பலூர்,  |   Published on : 29th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தரேஸ் அஹமது.

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்  கூட்ட அரங்கில், நடைபெறவுள்ள மக்களவைத்  தேர்தல் தொடர்பாக பெரம்பலூர், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மண்டல அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

    வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்பாகவும், முறையாகவும் கையாள வேண்டும். மக்களவைத்  தேர்தலில் உள்ள நடைமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள், வழிகாட்டுதலின்படி செயல்பட  வேண்டும். தேர்தலில் பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாகவும், நடுநிலைமையோடும் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விதிமீறல்களை தீவிரமாகக்

    கண்காணித்து  சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் தரேஸ் அஹமது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.  ராஜன்துரை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (பெரம்பலூர்- தனி), ராஜேந்திரன் (குன்னம்), மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக  உதவியாளார் ஏ. கார்குழலி, தேர்தல் அலுவலர்களுக்கான பற்று அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் மண்டல அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai