சுடச்சுட

  

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் ஆண்டு விழா கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

  செயலர் பி. நீலராஜ், துணைத் தலைவர் சீ. கதிரவன், இயக்குநர்கள் பி. மணி, பி. ராஜபூபதி, நிர்வாக அலுவலர் ஆர். ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரியின் முதல்வர் இளங்கோ ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

  விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் பார்த்திபன், பருவத் தேர்வுகள் மற்றும் கலைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

  விழாவில், கல்லூரி ஆலோசகர் எஸ். தாயுமானவன், கல்லூரி முதல்வர்கள் சி. நடராஜன், பி. கார்த்திக்கேயன், இளங்கோவன், வி. சேகர் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai