சுடச்சுட

  

  "பொறியியல் துறை மாணவர்கள் மாற்று எரிபொருள் கண்டறிய வேண்டும்

  By 'பெரம்பலூர்  |   Published on : 29th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொறியியல் துறை மாணவர்கள் மாற்று எரிபொருளை கண்டறிய வேண்டும் என்றார் அபுதாபி நாட்டின் பெட்ரோலிய விஞ்ஞானி சந்திரசேகர் சீனிவாச கண்ணன்.

  பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இரண்டு  நாள் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: பெட்ரோலியம் சுத்திகரித்தலில் தற்போது பயன்படுத்தப்படும்  நவீன யுக்திகளை கையாள்வதோடு, பெட்ரோலியத்துக்கு  மாற்று எரிபொருளை கண்டறிய வேண்டும்.

  கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்வியோடு நின்றுவிடாமல், தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொண்டால் வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.

  பொறியியல் துறையில் நவீன யுக்திகளை பயன்படுத்தினால் மட்டுமே வாழ்வில் முன்னேறலாம் என்றார்.

  தொடர்ந்து, குலோபல் எண்டர்பிரைசஸ் மற்றும் பினான்ஸ் நிறுவன துணைத் தலைவர் கணேசராமன், ஆராய்ச்சியின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

  கருத்தரங்கில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி  மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று அறிவியல், தொழில் நுட்பம், இயந்திரவியல், விமானவியல் பொறியியல், கணினி பொறியியல், மின்னணுவியல், கணினி பயன்பாட்டியல்  மற்றும் மேலாண்மை துறைகள் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

  தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் கல்வி ஆலோசகர் எஸ். தாயுமானவன் தலைமை வகித்தார். சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்ட்டியூட் ஆப் ரிசர்ச் அன்ட் டெக்னாலஜி முதல்வர் பி. கார்த்திகேயன், தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முதல்வர் இளங்கோ, சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா. வடிவழகன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் நடராஜன், துணை முதல்வர்கள் நந்தகுமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விமானவியல் துறைத் தலைவர் சா. சுரேகாரதி தலைமையிலான பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

  சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோவன் வரவேற்றார். இயந்திரவியல் துறைத் தலைவர் ஜோசப் பெர்னான்டஸ் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai