சுடச்சுட

  

  மென்திறன் போட்டிகளில் எம்.ஐ.இ.டி கலைக் கல்லூரி சிறப்பிடம்

  By பெரம்பலூர்,  |   Published on : 29th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்லூரிகளுக்கிடையேயான மென்திறன் போட்டிகளில் எம்.ஐ.இ.டி கலைக் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.

  பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறைகள் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான மென்திறன் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு தலைமை வகித்த, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கி. வரதராஜன் மென்திறன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

  துணைத் தலைவர் வி. ஜான் அசோக், கல்லூரி முதல்வர் வி. அயோத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இப்போட்டிகளில் ஹோலி கிராஸ் கல்லூரி, நேரு நினைவியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி, ரோவர் பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, எம்.ஐ.இ.டி கலைக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் கலைக் கல்லூரி உள்பட 20க்-கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மென்பொருள் சார்ந்த போட்டிகளான டெபுக்கிங், கோட் கன்வெர்சன், பேப்பர் பிரசன்டேசன், வெப் டிசைன், சர்பரைஸ் ஈவென்ட், மல்டிமீடியா பிரசன்டேசன், டம்ப் ஷேர்ட்ஸ், எட் ஜெப், சார்ட் பிலிம் மற்றும் க்யூஸ் ஆகிய போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

  இதில், எம்.ஐ.இ.டி கலைக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

  நிகழ்ச்சி நிறைவு விழாவில், மென்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோவர் கலைக் கல்லூரி துணை முதல்வர் கோ. ரவி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

  இதில், கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் எ. ஜாய் கிரிஸ்டி உள்பட கணினி அறிவியல் துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

  கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் மு. தாமோதரன் வரவேற்றார். தகவல் தொழில்நுட்பத் துறைத்  தலைவர் சோ. மணிமேகலை நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai