சுடச்சுட

  

  பெரம்பலுர் மாவட்டம், குன்னம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

  குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராம ஏரியில் 35 வயதுள்ள இளைஞரின் சடலம் கிடப்பதாக குன்னம் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அங்கு சென்றுப் பார்வையிட்டபோது கடந்த 15 நாள்களுக்கு முன் அந்த இளைஞர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

  இதுகுறித்து துங்கபுரம் (கிழக்கு) விஏஓ சின்னசாமி அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai