சுடச்சுட

  

  ஊடக மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

  By பெரம்பலூர்,  |   Published on : 30th March 2014 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அலுவலருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடகக் கண்காணிப்பு அறை மற்றும் புகார் மையத்தை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

  பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக கேஜ்பேட், தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக வி.பி. வர்மா, சித்தலிங்கேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இதனிடையே, தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட இருவரும், மாவட்டத் தேர்தல் அலுவலர் தரேஸ் அஹமதுவுடன், மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடக கண்காணிப்பு அறை மற்றும் புகார் மையத்தை ஆய்வு மேற்கொண்டு, ஊடகக் கண்காணிப்பு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த. மலையாளம், தேர்தல் செவின ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகாயினி, ஊடக கண்காணிப்புக் குழு செயலர் இ. சாலிதளபதி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai