சுடச்சுட

    

    பெரம்பலூர் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

    By பெரம்பலூர்  |   Published on : 30th March 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக கேஜ்பேட், தேர்தல் கணக்கு பார்வையாளர்களாக பெரம்பலூர் (தனி), லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வி.பி. வர்மா,

    குளித்தலை, முசிறி, துறையூர் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சித்தலிங்கேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் பொது பார்வையாளருக்கு தொடர்பு அலுவலராக உதவித் திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) எஸ். அன்புரோஸ் (94450-34171), கண்காணிப்பு பார்வையாளர் வி.பி. வர்மாவுக்கு வட்டாரா வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் (74026-07790), சித்தலிங்கேஷ்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ. செüந்தரர்ராஜன் (74026-07797) ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களுக்கான தொடர்பு அலுவலர்களாக, மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai