சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    வரும் மக்களவைத் தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியில் நம்மை நாமே ஆளுகின்ற ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் அனைவரின் உரிமையும், கடமையுமாகும். சட்டத்திற்குள்பட்டு சாதி, மதம், இனம், மற்றும் மொழி வேறுபாடுகளைக் களைந்து நேர்மையுடன் வாக்களிக்க உறுதியேற்க வேண்டும். வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்கத் தயார் என்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, பிரதான தெருக்கள் வழியாக சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், கல்லூரி முதல்வர் மாலதி, பேரணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புகழேந்தி உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai