சுடச்சுட

  

  ஆராய்ச்சித் திறன் மட்டுமே அறிவை அங்கீகரிக்கும் அளவுகோல்

  By பெரம்பலூர்  |   Published on : 31st March 2014 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆராய்ச்சித் திறன் மட்டுமே மாணவர்களின் அறிவை அங்கீகரிக்கும் அளவுகோல் என்றார் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி மின்னணுவியல் துறைத் தலைவர் பி. நாகராஜன்.

  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கருத்தரங்கை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:

  மின்னணுவியல் துறை மாணவர்கள் நவீன தொழில் நுட்பங்களை பாவிப்பு முறையில் செய்யும் விதம் மற்றும் அதன் காரணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக்கொள்வதோடு, கம்பியில்லா கட்டமைப்பு துறையில், நவீன கால பயன்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

  ஆராய்ச்சித் திறன் மட்டுமே மாணவர்களின் அறிவை அங்கீகரிக்கும் அளவுகோல் என்றார் அவர்.  கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. 

    கல்லூரித் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீலராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சி. நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். 

  ஏற்பாடுகளை பேராசிரியர்கள் எஸ். சத்யா, எம். தயாழினி, எஸ். சத்யமூர்த்தி ஆகியோர் செய்தனர். துறைத் தலைவர் பி. ராஜேஸ்வரி வரவேற்றார். பேராசிரியர் வி. பாரதி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai