சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இளம்பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

  வரதட்சிணைக் கொடுமையால் இறந்தாரா என சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் மகள் நாகலெட்சுமிக்கும் (19), பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த செந்திலுக்கும் (27) கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

  இந்நிலையில் நாகலெட்சுமி கடந்த 22-ம் தேதி விஷம் குடித்தார்.

  அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

  இதுகுறித்து நாகலெட்சுமியின் தந்தை நாகலிங்கம் அளித்த புகாரின் பேரில் குன்னம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கருப்புசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

  மேலும், நாகலெட்சுமிக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என,  சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி விசாரிக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai