சுடச்சுட

  

  40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற கருணாநிதியின் சாதனைகளையும், ஜெயலலிதாவால் அடைந்த வேதனைகளையும் விளக்கிக் கூறுங்கள் என்றார் மாநில இலக்கிய அணிச்செயலர் கவிதைப்பித்தன்.

  பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா முகாம் அலுவலகத்தில், திமுக இலக்கிய அணியின் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்திற்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:

  வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வதில் திமுக இலக்கிய அணிப்பேச்சாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும். திமுக மூலம் கருணாநிதி தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளையும், செயல்படுத்தியுள்ள திட்டங்களையும் கிராமம் தோறும் எடுத்துக்கூற வேண்டும்.

  அதேபோல, ஜெயலலிதா தமிழக மக்களுக்கு செய்துள்ள துரோகங்களையும், தீங்குகளையும் பட்டியலிட்டு துண்டுப் பிரசுரங்களாக வெளியிட வேண்டும். இலக்கியங்களில் தவறில்லாமல் எழுதுவதைக் காட்டிலும், லட்சியத்தில் பிசிறில்லாமல் வாழ்வதைப்போல, சமூகத்தை பாதுகாத்திடவும், சமதர்மத்தை நிலைநாட்டிடவும் அமைக்கப்பட்டுள்ள லட்சியக் கூட்டணி வெற்றி பெற தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார் அவர். 

  தொடர்ந்து, கர்நாடக மாநில இலக்கிய அணிச்செயலர் போர்முரசு கதிரவன், கரூர் அருணா பொன்னுசாமி, நாமக்கல் மணிமாறன், நெல்லை ஜோதி முருகன், புதுக்கோட்டை ராமசெல்வராஜ், அரியலூர் கலைச்செல்வன், தென்சென்னை தேவராஜ், சிவகங்கை சிவமுத்துபாலன், காரைக்கால் அமுதா ஆறுமுகம், சேலம் முல்லை பன்னீர்செல்வம், தஞ்சை திருஞானசம்பந்தம், விழுப்புரம் காண்டீபன் ஆகியோர் பேசினர்.

  தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அட்சயகோபால், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா. சந்திரசேகரன், பெரம்பலூர் மாவட்ட செயலர் பா. துரைசாமி, அவைத் தலைவர் வீ. வெள்ளசாமி, துணைச்செயலர் மகாதேவி ஜெயபால், பொதுக்குழு உறுப்பினர் கி. முகுந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  தலைமை இலக்கிய அணிச் செயலர் தஞ்சை கூத்தரசன் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணிச் செயலர் முத்தரசன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai