சுடச்சுட

  

  பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் லட்சுமி வித்யாலயா பள்ளியின் முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

  பள்ளியின் கவுரவத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர்கள் சுந்தர்ராஜ், லெட்சுமி, பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நக்கசேலம் அறிவாலயம் பள்ளி இயக்குநர்கள் ராம்குமார், செல்வராஜ், இளங்கோவன், ரா. தனலட்சுமி, சரவணன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு,  சான்றிதழ்களை வழங்கினர்.

  துணை முதல்வர் ரம்யா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பெரம்பலூர் அரிமா சங்க சாசனத் தலைவர் மு. ராஜாராம், அரிமா சங்க முன்னாள் தலைவர் சுகுமார், லாடபுரம் இந்தியன் வங்கி மேலாளர் குணராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

  ஏற்பாடுகளை ஹிந்தி ஆசிரியர் விஜயராகவன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் செய்தனர். பள்ளி முதல்வர் ஜெ. ஜொதி வரவேற்றார். ஆசிரியை ரா. கவிதா நன்றி கூறினார்.         

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai