சுடச்சுட

  

  தேசிய ஜனநாயக கூட்டணியினர் வாக்கு சேகரிப்பு

  By பெரம்பலூர்  |   Published on : 31st March 2014 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், ஐ.ஜே.கே. வேட்பாளர் டி.ஆர். பச்சமுத்துவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, பாஜக, மதிமுக, பாமக ஆகிய கட்சியினர் பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட அரணாரை, அரணாரை சிலோன் காலனி, கல்யாண் நகர், கீற்றுக்கடை, பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். தேமுதிக மாவட்டச் செயலர் துரை. காமராஜ், பாஜக மாவட்ட தலைவர் சி. சந்திசேகர், பாமக மாவட்டச் செயலர் செந்தில், ஐ.ஜே.கே., மாநில அமைப்பு செயலர் காமராஜ், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், தேமுதிக பெரம்பலூர் ஒன்றியச் செயலர் வாசு. ரவி, நகரச் செயலர் சி. ஜெயக்குமார், மாவட்ட துணைச் செயலர் கண்ணுசாமி, தொண்டரணிச் செயலர் புனிதராஜ், ஐ.ஜே.கே. மாநில வழக்குரைஞர் அணி செயலர் பி. அன்புதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.            

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai