சுடச்சுட

  

  நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  பயிற்சியை தொடக்கி வைத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரேஸ் அஹமது பேசியது:

  தேர்தலில் பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாகவும், நடுநிலைமையோடும் செயல்பட வேண்டும். அ

  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விதிமீறல்களை தீவிரமாகக் கண்காணித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 708 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், 708 வாக்குச்சாவடி முதல் நிலை அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவது தொடர்பாகவும், பொறுப்பு மற்றும் கடமை குறித்தும், தேர்தலின்போது அனைத்து அலுவலர்களும் கடைப்பபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்ககப்பட்டது.

  நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவை தொகுதியின் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ப. மதுசூதன் ரெட்டி, ராஜேந்திரன், பொறுப்பு அலுவலர்கள் இந்துமதி, தமிழ்செல்வன், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai