சுடச்சுட

  

  40 தொகுதிகளிலும் முற்போக்கு ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தொல். திருமாவளவன்.

  சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை இரவு திறந்து வைத்த அவர் மேலும் பேசியது:

  வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தலைவர் கருணாநிதியால் அறிவிக்கப்படுபவரே பிரதமராவார். இதில், எவ்வித ஐயமில்லை  மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப் பாடுபடுவேன் என்றார் அவர்.

  நிகழ்ச்சியில் திமுக பெரம்பலூர் மாவட்டச் செயலர் பா. துரைசாமி, அரியலூர் மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் தங்கதுரை, முன்னாள் மாவட்ட செயலர் வீர. செங்கோலன், மாநில இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை துணைச்செயலர் இரா. கிட்டு, வேப்பூர் ஒன்றிய திமுக செயலர் சி. ராஜேந்திரன், தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் வெற்றிசெல்வன், செந்தில் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai