Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. செல்லப்பிள்ளை தலைமை வகித்தார்.

    சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக அறிவித்து, அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ. 3,500 வழங்க வேண்டும். உணவு செலவு மானியம் உணவு ஒன்றுக்கு ரூ. 5 வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூரில்...

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் அரியலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம், உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனேநிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் அண்ணாசிலை அருகே மாவட்டத் தலைவர் ஷாஜகான் தலைமையில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழரசன் பேசும் போது அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப். 17 ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார். உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai