Enable Javscript for better performance
பாடாலூரில் மாணவர்சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பாடாலூரில் மாணவர்சேர்க்கைக்கான விழிப்புணர்வுப் பேரணி

    By பெரம்பலூர்  |   Published on : 17th April 2015 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

    பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஊராட்சித் தலைவர் வேல்முருகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    பாடாலூர் பகுதியின் பிரதான வீதிகள் வழியே சென்ற பேரணியில் பாடாலூர் அரிமா சங்கத் தலைவர் மாரிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியர்கள் பிரேமா, குமார், விநாயகமூர்த்தி உள்பட மாணவ,

    மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai