Enable Javscript for better performance
பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

    By பெரம்பலூர்,  |   Published on : 17th April 2015 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் மூலம் குப்பைகளை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    மக்கள்தொகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள, சுற்றுலா மற்றும் புனிதத் தலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஒட்டி அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது கழிவுப்பொருள்களை சேகரித்தல், மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை பிரித்தெடுத்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதலை உள்ளடக்கியதாகும்.

    திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சியில் உள்ள "150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர்' என்ற வகையில் தூய்மை காவலர்கள் என்பவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவர்களுக்கு, ஊதியம் வழங்கி கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சார்ந்தது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை திட்ட நிதியிலிருந்து 3 சக்கர வண்டிகள், பிளாஸ்டிக் கழிவுகளை நறுக்கி மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தூய்மை காவலர்களுக்கு ஆடைகள், கையுறைகள், ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    இத்திட்டம் குறித்து சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் சுய-உதவிக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு ஏப். 20ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai