Enable Javscript for better performance
மயக்க மருந்து தெளித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மயக்க மருந்து தெளித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

    By பெரம்பலூர்,  |   Published on : 17th April 2015 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழமழை மனைவி ராணி (28). இவர், வியாழக்கிழமை அவரது வீட்டில் தனியாக இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் ராணியின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். அப்போது, வெளியே வந்த ராணியின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்துள்ளனர். உடனே, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனராம். இதுகுறித்து அவரது உறவினர் சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai