Enable Javscript for better performance
மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By பெரம்பலூர்  |   Published on : 17th April 2015 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர், அலுவலக உதவியாளர், கணிணி இயக்குபவர் பணிகளில் தலா ஒரு பணியிடத்துக்கு 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளது: ஆற்றுப்படுத்துநர் பணியிடத்துக்கு உளவியல், சமூகப்பணி, ஆற்றுப்படுத்துதல், வழிகாட்டுதல், உளவியல் ஆற்றுப்படுத்துதல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. 40 வயதுக்கு மிகக்கூடாது. மாதத்துக்கு ரூ. 14 ஆயிரம் தொகுப்பூதியம். அலுவலக உதவியாளர், கணிணி இயக்குபவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலை தட்டச்சும், கணினி இயக்குவதிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு அனுபவம் தேவை. 40 வயதுக்கு மிகக்கூடாது. மாதத்துக்கு ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியம்.

    இணையத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, மே 5-ம் தேதி மாலைக்குள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு திட்டம், எம்.எம். பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai