Enable Javscript for better performance
மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியின் 13-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளி நிறுவனர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் ஆர். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சித்த மருத்துவரும், எழுத்தாளருமான சிவராமன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, சித்த மருத்துவம் மற்றும் மரபு வகை உணவின் சிறப்புகள் குறித்தும், உடல் ஆரோக்கியம் பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

    பள்ளி முதல்வர் ஆர். அங்கயற்கண்ணி ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai