Enable Javscript for better performance
அனுக்கூரில் கால்நடை கிளை நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர், ஜன. 27: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அனுக்கூர் கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 

    கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 35 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 1 கால்நடை கிளை நிலையம் மூலமாக 1,20,287 பசு இனங்கள், 951 எருமை இனங்கள், 1,24,651 வெள்ளாடுகள், 39,407 செம்மறியாடுகள், 72,398 கோழிகள், 4,985 நாய்கள், 5,186 பன்றிகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப, ஆண்டுதோறும் கிளை நிலையங்களாக உள்ளவற்றை தரம் உயர்த்தி கால்நடை மருந்தகங்களாகவும், கால்நடைகளின் நலம் காக்க போதிய வசதி இல்லாத கிராமங்களில் அரசின் விதிகளுக்கேற்ப புதிய கால்நடை கிளை நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கிளை நிலையத்தின் மூலம் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு, உரிய செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி ஆகிய சிகிச்சைகள் மேற்கொண்டு பயன்பெறலாம். மேலும், இப்பகுதியில் தீவன வளர்ப்புத் திட்டம், கோழிப்பண்ணை அபிவிருத்தி திட்டம் ஆகிய அரசு திட்டங்களை செயல்படுத்த சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றார் அவர்.

    விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) க. தங்கராசு, சிறப்பறிஞர் ப. மோகன், உதவி இயக்குநர் மா. மனோகரன், கால்நடை உதவி மருத்துவர் த. ராமன் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai