Enable Javscript for better performance
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில், மாவட்ட செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத் திட்டங்கள், அரசு விழாக்களில் ஆட்சியர், மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்), பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

    கண்காட்சியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி. மலர்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். ராஜேந்திரன், வட்டாட்சியர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் அ. சிவகாமி உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai