Enable Javscript for better performance
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா

    By பெரம்பலூர்  |   Published on : 28th January 2015 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர், ஜன. 27: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

    செட்டிக்குளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா நடைபெற்று வந்தது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் உள்ள 2 தேர்களும் பழுதானதால் தைப்பூச திருவிழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஒரு தேர் இழுக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு தேரும் புதுப்பிக்கப்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன் அதன் வெள்ளோட்டமும் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், செட்டிக்குளம், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், மங்கூன், குரூர், சிறுவயலூர், மாவலிங்கை, கூத்தனூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,  அலங்கார வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. பிப். 1-ம் தேதி இரவு 7 மணிக்கு  திருக்கல்யாண உற்சவமும், சுவாமி புறப்பாடும், 2-ம் தேதி 8-ம் திருவிழாவையொட்டி குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலாவும், பிப். 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    பக்தர்கள் வசதிக்காக பிப். 2 மற்றும் 3ம் தேதிகளில்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai