Enable Javscript for better performance
பெரம்பலூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர். மதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் வீரமுத்து, கந்தசாமி, சவுந்தர்ராஜன், மாவட்ட அமைப்பாளர்கள் சுப்ரமணியன், ஜெயக்குமார், ஜோதி, பன்னீர்செல்வம், ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். முதியோர் உதவி தொகையை நிறுத்தக் கூடாது. ஏழை, எளிய மாணவர்களுக்கு உடனடியாக கல்விக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மனித உரிமைத் துறை மாவட்டத் தலைவர் காமராஜ், மகளிரணி மாவட்ட பொறுப்பாளர் இந்திராணி, சேவா தள மாவட்ட பொறுப்பாளர் சிவாஜி மூக்கன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai