Enable Javscript for better performance
மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர், ஜன. 27: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர். மகேஸ்வரி தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் டி. அமுதா, எம். இந்திராணி, ஆர். சரஸ்வதி, எஸ். கருணாமணி, க. ஜெயா, பி. நல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலர் மு. கண்ணகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் அ. வேணுகோபால், மாவட்ட செயலர் வீ. ஞானசேகரன், மாநில நிர்வாகி செல்வ தையல் நாயகி, கட்சி நிர்வாகிகள் ஜெயராமன், ராஜூ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இதில், மாதர் சங்க நிர்வாகிகள் செல்வி, என். சத்யா, ஆர். மேகலா, ஏ. இந்திரா, கே. வசந்தா, பொன்னம்மாள், தனலட்சுமி, மூக்காயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai