Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: இருவர் சாவு

    By பெரம்பலூர்  |   Published on : 28th January 2015 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர், ஜன. 27: பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.  பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி மகன் செந்தில் (35). இவர் பெரம்பலூரில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். இவரது நண்பர் எளம்பலூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் விஜயக்குமார் (25). இருவரும் பொருள்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மாலை திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூர் அருகே சென்றபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயேயும், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்திலும் உயிரிழந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai