சுடச்சுட

  

  பருத்தி, மக்காச்சோளத்தில் கூடுதல் லாபம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

  By பெரம்பலூர்,  |   Published on : 29th January 2015 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பருத்தி, மக்காச்சோளத்தில் அதிக லாபம் பெற விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் அறுவடை நடைபெறுவதைத் தொடர்ந்து, பெரம்பலூர் - வடக்குமாதவி சாலையில் காந்திநகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பருத்தி, மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளை வரவழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  எனவே, விவசாயிகள் அதிகளவில் பருத்தி மற்றும் மக்காச்சோள விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும். விவசாயிகளால் கொண்டுவரப்படும் விளைபொருள் ஈரப்பதமாக இருந்தால், அதன் விலை குறைவதோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்க நேரும்பட்சத்தில் ஈரப்பதம் காரணமாக பருத்தி நிறம் மாறும்.

  இதனால், மக்காச்சோளத்தில் பூஞ்சானம் வளர வாய்ப்புள்ளது. தரமும், விலையும் குறையும். பருத்தி அறுவடை செய்யும்போது வயல் அளவிலேயே தரமான, சுத்தமான வெண்மையான பருத்தியை தனி கூடையிலும், நிறம் மாறிய தரம்குறைந்த பருத்தியை வேறு ஒரு கூடையிலும் தனித்தனியாக தரம்பிரித்து சேகரிக்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட பருத்தியை நிழலில் சாக்குகள் மீது பரப்பி 2 முதல் 3 நாள்கள் உலர்த்த வேண்டும்.

  பருத்தியை நேரடி சூரிய வெயிலில் காயவைக்கக்கூடாது. மக்காச்சோளத்தை நேரடி சூரிய வெயிலில் 3 முதல் 4 நாள்கள் உலர்த்த வேண்டும். இவ்வாறு, நன்கு உலரவைக்கப்பட்ட பருத்தி மற்றும் மக்காச்சோள விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும். இதன்மூலம் கூடுதல் விலை பெற்று பயன்பெறலாம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai