Enable Javscript for better performance
கூட்டணி கட்சியினரிடம் தேமுதிக வேட்பாளர் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    கூட்டணி கட்சியினரிடம் தேமுதிக வேட்பாளர் ஆதரவு

    By பெரம்பலூர்  |   Published on : 15th April 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் சட்டப்பேரவைத் (தனி) தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கி. ராஜேந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வியாழக்கிழமை ஆதரவுக் கோரினார்.

    இதையொட்டி, பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பங்கேற்ற பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் கி. ராஜேந்திரன், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ஆதரவு கோரினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வேட்பாளர் கி. ராஜேந்திரன்.

    நிகழ்ச்சிகளில், மாவட்ட செயலர்கள் துரை. காமராஜ் (தேமுதிக), செ. துரைராஜ் (மதிமுக) சி. தமிழ்மாணிக்கம் (விசிக) எம்.என். ராஜா (தமாகா), வீ. ஞானசேகரன் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, சிஐடியு மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி, தேமுதிக ஒன்றிய செயலர் வாசு. ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai