Enable Javscript for better performance
வீர, தீர விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வீர, தீர விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

    By பெரம்பலூர்  |   Published on : 15th April 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்தோர் அசோக சக்ரா வீர தீர விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்றார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ்.

    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

     வீர, தீரச் செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இந்திய அரசால் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுகள் அசோக சக்ரா விருது (தன்னிகரற்ற தியாகம் புரிந்தவர்கள்), கீர்த்தி சக்ரா விருது (பகட்டான வீரத்துடன் போராடியவர்கள்) மற்றும் ஷவுர்ய சக்ரா விருது (வீரத்துடன் போராடியவர்கள்) ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சியின் போது, மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. ராணுவத்தினர், பொதுமக்கள், காவல் துறையினர், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 

    இயற்கைப் பேரழிவுகள், விபத்து, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், தீ விபத்துகள், தீவிரவாத தாக்குதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுத்தவர்கள் ஆகியோருக்கு வீர, தீர செயல்கள் புரிந்தமைக்கான அசோக சக்ரா வீர, தீர விருதுகள் வழங்கப்படுகிறது.

    அதன்படி, 2015-16-ம் ஆண்டுக்கான அசோக சக்ரா வீர தீர விருதுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ மூலம் பதிவிறக்கம் செய்து, 2015-16-ம் ஆண்டுக்கான அசோக சக்ரா விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர்- செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈ.வே.ரா, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா சென்னை 600 084 என்ற முகவரிக்கு ஏப். 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற 74017 03452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai