Enable Javscript for better performance
எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் தீபத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் தீபத் திருவிழா

    By DIN  |   Published on : 13th December 2016 06:00 AM  |   அ+அ அ-   |    |  

    பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 210 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் 1,008 கிலோ நெய் கொண்டு மகாதீபம் திங்கள்கிழமை மாலை ஏற்றப்பட்டது.  
    விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கஜ பூஜை, கோ பூஜை, அசுவ பூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், காலை 10.30 மணிக்கு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து யானை மீது தீபம் ஏற்றும் செப்பு கொப்பரை வைத்து 63 நாயன்மார்கள், பஞ்சலோக சிலையுடன் சிவ பூதன வாத்தியங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. 7.30 மணிக்கு அறுபத்து மூவர் சிலை அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது.
    சிவனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பிரம்மரிஷி மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மலை மேல் மாலை 6 மணிக்கு செப்பு கொப்பரையில் 1,008 மீட்டர் நீளமுள்ள திரி, 1,008 கிலோ நெய் மற்றும் 100 கிலோ கற்பூரம் கொண்டு  அருட்பெருஞ்சோதி மகாதீபம் ஏற்றப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, 6.15 மணிக்கு சாதுக்களுக்கு வஸ்திர தானமும்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.  
    இதில், தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி ஏ. முத்துசாரதா, ஐ.ஏ.எஸ் அதிகாரி சி. ராஜேந்திரன், வருமான வரித்துறை இணை ஆணையர் வி. நந்தகுமார், ஓய்வு பெற்ற நீதிபதி சுப்ரமணியன், திரைப்பட இயக்குநர் யார் கண்ணன், நடிகர் தமிழ் சிவா, சிவசேனை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் சசிக்குமார், டாக்டர் ரவிக்குமார், யதார்த்த ஜோதிடர் ஷெல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai