Enable Javscript for better performance
எளம்பலூரில் வலம்புரி விநாயகர் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரம் எதிரே அமைந்துள்ள அருள்மிகு வலம்புரி விநாயகர் கோயிலில் நவக்கிரக ஆலய குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
    ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் சித்தர் சுவாமி மலையடிவாரத்தில், அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள நவக்கிரஹ கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தலையாட்டி சித்தர் ஆசிரம நிர்வாகிகள் காமராஜ், நந்தீஸ்வரன், சக்தி ஆகியோர் முன்னிலையில், காலை 9 மணிக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    இதில், எளம்பலூர் உள்பட பல்வேறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி தயாளன் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.      

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai