Enable Javscript for better performance
சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிக்குளம் மற்றும் பெரம்பலூர் வாரச் சந்தையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி அண்மையில் நடைபெற்றது.
    இதில், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத் திட்ட உதவிகளின் புகைப்படங்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் ஆட்சியர், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி
    அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
    மேலும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விடியோ படக்காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. இவற்றை, செட்டிக்குளம் கோயில் மற்றும் பெரம்பலூர் வாரச்சந்தைக்கு வந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai