Enable Javscript for better performance
நாளை தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து, பெரம்பலூர் தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் அதிகப்படியான தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்களின் நலத்திட்டங்களில் தொழிலாளர்கள் பயனடையும் வகையிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai