Enable Javscript for better performance
பெரம்பலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 28th November 2016 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நவ. 29 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில்  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.எரிவாயு நுகர்வோர், எரிவாயு சம்பந்தமான குறைகள் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai